இளையராஜா...... இந்த சொல்லுக்கு மயங்காத தமிழ்நாட்டு மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்....
மேலே இருக்கும் காணொளியில் இருக்கும் பாடல் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
இது ஹம்சத்வனி என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்...
பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் இசைகோர்ப்பில் வரும் தாள கதியே பாடலுக்கான ஒரு உணர்ச்சியை கொடுக்கும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் குழல் இசையில் தாளத்தின் போக்கு திஸ்ரம் எனப்படும் மூன்று மாத்திரைகளை கொண்ட தாள அமைப்பை கொண்டு பாடலுக்கான போக்கினை தெரிவு செய்கின்றது... குழல் இசை தொடங்கும் பொழுது, முன்பு இசைத்த கிடார் திஸ்ரம் கீழ் காலத்தில் இருக்க, டிரம்ஸ் துரித கதியில் இசைக்கபடுகின்றது. குழலினை தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோர்ப்பு பாடலின் அழகை பன்மடங்கு பெருக்குகின்றது.....
மயிலே மயிலே உன் தோகை எங்கே என்கின்ற முதல் வரியின் ஸ்வர அமைப்பு ஹம்சத்வனி ராக சாயலை அழகுடன் கொணர்கின்றது. மிருதங்கம் மிக மிக அழகாக இந்த பல்லவியில் இசைக்கப்படுவதை நாம் கேட்கலாம்.
பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையில் வரும் அழகான ஸ்வர பிரயோகங்கள் கிடார் இசையில் தெவிட்டாத தேனாக..... தொடர்ந்து வரும் வயலின் சஞ்சாரங்கள், முடிவில் குழலிசை அழகாக பாடகர் தொடங்கும் இடத்தில் பளிச்சென்று முடிகின்றது..... முதல் சரணத்தின் தொடக்கத்தில்.... தென்றல் தாலாட்ட தென்னை இருக்க என்ற வரியில், இருக்க , ரி ச நி என்ற அமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டு திரு. பாலசுப்ரமணியம் அவர்களால் தென்றல் தாலாட்டுவது போல் பாடப்பட்டும் இருக்கின்றது. அடுத்த வரியின் நீளம் அழகான அளவில் குறைக்கப்பட அது அந்த தாளத்தின் அழகை இரு மடங்காக ஆக்குகின்றது. திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் மிருதங்கம் இன்னொரு மெல்லிசை கருவி போல் பாடல் முழுவதும் படர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையில் வயலினின் அழகிய ஆக்கிரமிப்பு...
இந்த ஹம்சத்வனி கர்நாடக இன்னிசை நிகழ்சிகளில் பெரும்பாலும் முதலில் இசைக்கப்படும் ஒரு ராகமாகும்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் தந்தை ராமஸ்வாமி தீட்சிதர் உருவாக்கியதே இந்த ஹம்சத்வனி ராகமாகும்.
இதனை பொதுவாக சங்கராபரணம் என்ற ராகத்தில் இருந்து பிறந்தது என்று கூறினாலும் , இதில் இசைக்கபடுகின்ற பிரயோகங்கள் மற்றும் விதம் இவை அனைத்தையும் பார்த்தல் இந்த ராகத்தின்
தாய் கல்யாணி ராகம் என்றே தோன்றுகின்றது.
இளையராஜா அவர்கள் ஹம்சத்வனி ராகத்தில் இசை அமைத்த பாடல்களை கேட்கும் பொழுது , ம என்கின்ற ஸ்வரம் மிக நுண்ணியமாக கேட்கும்... ஆம், அந்த ஸ்வரம் கல்யாணி ராகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்வரம்...
அவரின் இசை ஆளுமை மிகப்பெரியது... அதில் ஒரு பகுதியாவது நம்மால் புரிந்து கொள்ளள முடிகின்றதா என்று பார்ப்போம் ......
ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரு இளையராஜா.......
அவர் இசை தரும் போதை ...... என்னது? போதையா? என்று கேட்கலாம்.
ஆம். அந்த இசையை ரசிப்பதற்கு பல நிலைகள் உள்ளன..... அதில், கொஞ்சம் முற்றிய நிலை இந்த போதை.... ஒரு பூச்செடியின் மேல் அமர்ந்து தேனை ரசித்த வண்டு . மீண்டும் மீண்டும் அந்த பூவிலே அமருமாம். அந்த மாதிரியான போதை , இளையராஜாவின் இசை என்னும் போதை.
எண்பதுகளில் தொடங்கி இன்று வரை நீண்டு நிற்கும் ஒரு மாபெரும் இசை தொகுப்பு அவர்.
இசையை பற்றி நுட்பமான விவரம் இல்லாதவராக இருப்பினும் சரி, இசையில் நுண்மான் நுழைபுலம் பெற்றவராக இருந்தாலும் சரி, இளையராஜாவின் இசையை கடக்காமல் அடுத்த கட்டத்தை செல்ல முடியாது.
ஒரு பாடலுக்கான இசையை அமைப்பதிலாகட்டும், இசைக்கருவிகளை தேர்வு செய்வதிலாகட்டும், அவற்றின் அமைவுகளை தீர்மானிப்பதிலாகட்டும், அவருக்கு நிகர் அவர்தான்.....
கிராமிய இசையில் தொடங்கி, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வேறு வகையான இசை வகைகளையும் சாமானியனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே...
சில கர்நாடக இசை ராகங்களை அவர் கையாண்டுள்ள விதம் பிரம்மிக்க வைக்கின்றது...
இசையை பற்றி நுட்பமான விவரம் இல்லாதவராக இருப்பினும் சரி, இசையில் நுண்மான் நுழைபுலம் பெற்றவராக இருந்தாலும் சரி, இளையராஜாவின் இசையை கடக்காமல் அடுத்த கட்டத்தை செல்ல முடியாது.
ஒரு பாடலுக்கான இசையை அமைப்பதிலாகட்டும், இசைக்கருவிகளை தேர்வு செய்வதிலாகட்டும், அவற்றின் அமைவுகளை தீர்மானிப்பதிலாகட்டும், அவருக்கு நிகர் அவர்தான்.....
கிராமிய இசையில் தொடங்கி, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வேறு வகையான இசை வகைகளையும் சாமானியனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே...
சில கர்நாடக இசை ராகங்களை அவர் கையாண்டுள்ள விதம் பிரம்மிக்க வைக்கின்றது...
மேலே இருக்கும் காணொளியில் இருக்கும் பாடல் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
இது ஹம்சத்வனி என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்...
பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் இசைகோர்ப்பில் வரும் தாள கதியே பாடலுக்கான ஒரு உணர்ச்சியை கொடுக்கும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் குழல் இசையில் தாளத்தின் போக்கு திஸ்ரம் எனப்படும் மூன்று மாத்திரைகளை கொண்ட தாள அமைப்பை கொண்டு பாடலுக்கான போக்கினை தெரிவு செய்கின்றது... குழல் இசை தொடங்கும் பொழுது, முன்பு இசைத்த கிடார் திஸ்ரம் கீழ் காலத்தில் இருக்க, டிரம்ஸ் துரித கதியில் இசைக்கபடுகின்றது. குழலினை தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோர்ப்பு பாடலின் அழகை பன்மடங்கு பெருக்குகின்றது.....
மயிலே மயிலே உன் தோகை எங்கே என்கின்ற முதல் வரியின் ஸ்வர அமைப்பு ஹம்சத்வனி ராக சாயலை அழகுடன் கொணர்கின்றது. மிருதங்கம் மிக மிக அழகாக இந்த பல்லவியில் இசைக்கப்படுவதை நாம் கேட்கலாம்.
பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையில் வரும் அழகான ஸ்வர பிரயோகங்கள் கிடார் இசையில் தெவிட்டாத தேனாக..... தொடர்ந்து வரும் வயலின் சஞ்சாரங்கள், முடிவில் குழலிசை அழகாக பாடகர் தொடங்கும் இடத்தில் பளிச்சென்று முடிகின்றது..... முதல் சரணத்தின் தொடக்கத்தில்.... தென்றல் தாலாட்ட தென்னை இருக்க என்ற வரியில், இருக்க , ரி ச நி என்ற அமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டு திரு. பாலசுப்ரமணியம் அவர்களால் தென்றல் தாலாட்டுவது போல் பாடப்பட்டும் இருக்கின்றது. அடுத்த வரியின் நீளம் அழகான அளவில் குறைக்கப்பட அது அந்த தாளத்தின் அழகை இரு மடங்காக ஆக்குகின்றது. திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் மிருதங்கம் இன்னொரு மெல்லிசை கருவி போல் பாடல் முழுவதும் படர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையில் வயலினின் அழகிய ஆக்கிரமிப்பு...
இந்த ஹம்சத்வனி கர்நாடக இன்னிசை நிகழ்சிகளில் பெரும்பாலும் முதலில் இசைக்கப்படும் ஒரு ராகமாகும்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் தந்தை ராமஸ்வாமி தீட்சிதர் உருவாக்கியதே இந்த ஹம்சத்வனி ராகமாகும்.
இதனை பொதுவாக சங்கராபரணம் என்ற ராகத்தில் இருந்து பிறந்தது என்று கூறினாலும் , இதில் இசைக்கபடுகின்ற பிரயோகங்கள் மற்றும் விதம் இவை அனைத்தையும் பார்த்தல் இந்த ராகத்தின்
தாய் கல்யாணி ராகம் என்றே தோன்றுகின்றது.
இளையராஜா அவர்கள் ஹம்சத்வனி ராகத்தில் இசை அமைத்த பாடல்களை கேட்கும் பொழுது , ம என்கின்ற ஸ்வரம் மிக நுண்ணியமாக கேட்கும்... ஆம், அந்த ஸ்வரம் கல்யாணி ராகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்வரம்...
அவரின் இசை ஆளுமை மிகப்பெரியது... அதில் ஒரு பகுதியாவது நம்மால் புரிந்து கொள்ளள முடிகின்றதா என்று பார்ப்போம் ......
ஒரு சூரியன்... ஒரு சந்திரன்... ஒரு இளையராஜா.......
No comments:
Post a Comment